காரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’

காரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’

காரைக்கால் ஜெய்சங்கர் - Karaikal Jaishankar

சென்னையில் நாளை காரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’

சென்னை: ‘லஷ்மண் ஸ்ருதி’யின், ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, இன்று (18-12-2019) துவங்கி, 25ம் (25-12-2019) தேதி வரை நடக்கிறது.

சென்னையில் நடக்கும் மார்கழி இசை விழாக்களில் தனித்துவம் பெற்றது, ‘லஷ்மண் ஸ்ருதி’யின், ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி. இதில், பிரபல பரத நாட்டிய கலைஞர்கள், கர்நாடக இசை கலைஞர்கள் என, 60 பேர் பங்கேற்று, கலை ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னை, காமராஜர் அரங்கில், நாளை காலை, 9:45 மணிக்கு, ‘கிருஷ்ண லீலா’ என்ற தலைப்பில், திருச்சி, என்.ஆர்.ஐ.ஏ.எஸ்., அகாடமி வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் காரைக்கால் ஜெய்சங்கரின், இசை நிகழ்ச்சி நடக்கிறது. இவர், ‘கலாஷேத்திரா’வின் ருக்மணிதேவி இசைக் கல்லுாரியில், வாய்ப்பாட்டு, இசை குறித்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கலைமாமணி வைரமங்கலம் லட்சுமி நாராயணன் மற்றும் திருவெண்காடு ஜெயராமன் ஆகியோரின் சீடரும் ஆவார்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடந்த பல்வேறு இசை நிகழ்ச்சிகளில், நடுவராக இருந்துள்ளார். வட அமெரிக்கா, புளோரிடா, நியூஜெர்சி, வாஷிங்டன் உட்பட பல நாடுகளில், இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.தமிழக அரசின் வாய்ப்பாட்டு இசையில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னை பல்கலையில், இந்திய இசை பாடப்பிரிவில், முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.யுவகலாநிதி, கலைகோமாமணி உட்பட, பல விருதுகளை, 36 வயதான காரைக்கால் ஜெய்சங்கர் பெற்றுள்ளார். 2002ல் ஹரியானாவில் நடந்த இசை நிகழ்ச்சியில், வாய்ப்பாட்டில் தங்கம் வென்றுள்ளார்.

நன்றி: தினமலர்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2436708&Print=1